News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Reservation protest turns fatal: 1,000 students dead | GT ISL


Bangladesh முன்னாள் பிரதமர் Sheikh Hasina மீது, 2024 ஜூலை மாதம் இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டங்களில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டங்கள் சட்டத்துக்கு எதிராக கோபமடைந்த மாணவர்களால் தொடங்கப்பட்டது, ஆனால் போலீஸ், பாதுகாப்பு படைகள் மற்றும் அவாமி லீக் கட்சியினர் முயற்சியால் வன்முறையாக மாறியது.

கலவரால் தலைநகர் Dhaka உள்ளிட்ட பல நகரங்களில் பலர் கொல்லப்பட்டனர். நிலை கட்டுப்பாடாகாததால், Hasina ஆகஸ்ட் 5ல் பதவியிலிருந்து ராஜினாமா செய்து வெளிநாட்டுக்கு தப்பினார். இடைக்கால அரசு Muhammad Yunus தலைமையில் அமைந்தது.

வழக்கில், நீதிமன்றம் Hasina மாதிரியாக படுகொலைகளுக்கு மூளையாகச் செயல் பட்டவர் என கண்டுபிடித்து, மரண தண்டனை வழங்கியது. Hasina இதை “மோசடி நீதிமன்ற தீர்ப்பு” என கண்டித்து, அரசியல் விதிப்பாக செயல்பட்டது எனக் கூறியுள்ளது.

தீர்ப்புக்கு எதிராக அவாமி லீக் கட்சியினர் வங்கதேசம் முழுவதும் கலவரம் ஏற்படுத்தினர்; அதிகாரிகள் வீடுகள் மீது வெடிகுண்டு வீசப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, சாலைகள் மறைக்கப்பட்டன; போலீசார் அவற்றை கட்டுப்படுத்தினர்.

முக்கிய குற்றச்சாட்டுகள்:

  1. மாணவர்களை தேச துரோகிகள் என குற்றம்சாட்டி ஊக்குவித்தல்

  2. போராட்டங்களை குண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டால் ஒடுக்க உத்தரவிட்டல்

  3. Dhaka உள்ளிட்ட நகரங்களில் பல மாணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகள்.

___________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments