News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Plot to bomb major cities nationwide foiled! | GT ISL


 நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 32 கார்களை வெடிகுண்டு கார்களாக மாற்ற, 2,900 கிலோ வெடி பொருட்களை பதுக்கி வைத்தனர்.

செங்கோட்டையில் நடந்த கார் வெடிப்பில், டாக்டர் உமர் நபி கார் ஓட்டியவர், மேலும் கைதான டாக்டர் ஆதில், டாக்டர் முஸாம்மில் அகமது, பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் இமாம் இர்பான் அகமது ஆகியோர் சம்பந்தப்பட்டனர். இமாம் இர்பான் அகமது இந்த டாக்டர்கள் நெட்வொர்க்கை பயங்கரவாத பாதையில் ஈர்த்த முக்கிய சதிகாரன்.

புல்வாமா போன்ற முன்னோடிய சம்பவங்களைப் போல, அவர்கள் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டனர். டாக்டர் உமர், ஜனவரி 2022-ல் டாக்டர் முசாபர் அகமது ராதர் மற்றும் முஸாம்மில் ஷகீலுடன் துருக்கி சென்றார், அங்கு பயங்கரவாதிகளை சந்தித்து திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு, டில்லி செங்கோட்டை தாக்குதல் சம்பவம், பயங்கரவாதிகளின் சதித் திட்டத்தின் ஒருபங்காக இருந்தது, ஆனால் கைதான டாக்டர்கள் மற்றும் பாதுகாப்பு படையினுடைய நடவடிக்கையால் திட்டம் முறியடிக்கப்பட்டது.

____________________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading


YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments