News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Awami League Party urges ban lift before returning to India | GT ISL


 வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்புவதால், அவாமி லீக் கட்சி மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்றும், நியாயமான, சுதந்திரமான தேர்தலை இடைக்கால அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அவர் ஜனநாயகத்தில் பங்கேற்பதே முக்கிய நிபந்தனை என்றும், இடைக்கால அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே திரும்ப முடியும் என்றும் வலியுறுத்தினார். 

அவர் இந்தியா வழங்கிய தஞ்சம் மற்றும் ஆதரவை பாராட்டி, சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்கால வழக்குக்கு தயாராக உள்ளார் என்றும் தெரிவித்தார்.

_______________________________________________________


Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading


YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments