News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Car Blast Near Delhi’s Red Fort | GT ISL

 

  • டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது; இதில் 15 பேர் உயிரிழந்தனர், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

  • வெடித்த கார் ‘ஹூண்டாய் ஐ20’, சிக்னலில் மெதுவாக செல்கையில் வெடித்து சுற்றியுள்ள ஆறு கார்கள், இரண்டு இ-ரிக்‌ஷாக்கள், ஒரு ஆட்டோ தீப்பற்றி சேதமடைந்தன.

  • சம்பவம் ஜம்மு–காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் நடக்கவிருந்த ஐ.எஸ்., ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத திட்டங்களின் பங்குதான் என்காணப்படுகிறது.

  • டாக்டர் அடில் அகமது, டாக்டர் முபாஸில் ஷகீல் மற்றும் மற்றோர் பெண் டாக்டர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; ஆயுதங்கள், வெடிமருந்துகள், அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ரிசினை பறிமுதல் செய்யப்பட்டது.

  • பாதுகாப்பு படைகள், டில்லி போலீஸ், என்.எஸ்.ஜி., என்.ஐ.ஏ. ஆகியவை விசாரணை மற்றும் கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ளன.

  • உள்துறை அமைச்சர் அமித் ஷா காயமடைந்தவர்களை மருத்துவமனையில் ஆறுதல் கூறி, பாதுகாப்பு நிலவரத்தை பரிசீலித்தார்; பிரதமர் மோடியும் தகவல் பெற்றார்.

_____________________________________________________


Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments