News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Vijay Rejects Congress Alliance Ahead of Bihar Elections | GT ISL

 

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் காங்கிரசுடன் கூட்டணி குறித்து நேர்மறை பேச்சுகள் நடந்தாலும், பீஹார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வி த.வெ.க. தலைமையை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

பீஹாரில் அதிக தொகுதிகள் பெற்றும் காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது மற்றும் கூட்டணியே தோல்வியடைந்தது த.வெ.க. நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என்ற அச்சத்தால், காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம்; தனித்தே தேர்தலை சந்திக்கலாம் என்ற முடிவுக்கு விஜய் தரப்பு வந்துள்ளதாக தகவல்.

இதற்கிடையில், விஜயுடன் கூட்டணி அமைப்பதற்காக பா.ஜ.க. தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. நடிகர் விஜயை சந்தித்து பேசுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் தங்க திட்டமிட்டுள்ளதாகவும், அ.தி.மு.க.–பா.ஜ.க.–த.வெ.க. மெகா கூட்டணி அமைப்பதே அவரின் நோக்கம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

______________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments