News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

ICC unveils T20 World Cup 2026 schedule; India, Pakistan grouped together | GT ISL


 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8, 2026 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவான ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா–பாகிஸ்தான் முக்கிய போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். பாதுகாப்பு காரணங்களால், பாகிஸ்தான் விளையாடும் அனைத்து போட்டிகளும் (அரையிறுதி, இறுதிப்போட்டி உட்பட) இலங்கையிலேயே நடத்தப்படும். இறுதிப்போட்டி மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்; பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அது கொழும்புக்கு மாற்றப்படும்.

போட்டிகள் இந்தியாவில் மும்பை, டில்லி, அகமதாபாத், சென்னை, கோல்கட்டா நகரங்களிலும், இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டியிலும் நடைபெறும்.

இந்தியாவின் லீக் போட்டிகள் பிப்ரவரி 7 (அமெரிக்கா – மும்பை), பிப்ரவரி 12 (நமீபியா – டில்லி), பிப்ரவரி 15 (பாகிஸ்தான் – கொழும்பு), பிப்ரவரி 18 (நெதர்லாந்து – அகமதாபாத்) ஆகிய தேதிகளில் நடக்கின்றன.

2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, 2026 டி20 உலகக் கோப்பையின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

_____________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments