News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Government Vows to Expel Infiltrators | GT ISL


 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டில் உள்ள ஊடுருவல்காரர்களை அடையாளம் காண்ந்து அகற்றும் பணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (S.I.R.) நடவடிக்கைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இந்த பணியை எதிர்த்து மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அமித் ஷா, நாட்டின் ஜனநாயக அமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாக்க இது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். அவர், நாட்டின் பிரதமர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுக்கும் உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், ஊடுருவல்காரர்கள் இதற்கு உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments