News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

“If Provoked, I’ll Shake the Nation” | GT ISL


 மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR)க்கு எதிராக, முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தன்னை பா.ஜ.க. சீண்டினால் “நாட்டையே உலுக்குவேன்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் தோல்வியடையும் என்றும், SIR பணிக்கு எதிராக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் கமிஷன் பா.ஜ.க.க்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றம் சாட்டிய மம்தா, உண்மையான வாக்காளர்கள் பயப்பட வேண்டாம்; தன் ஆட்சியில் வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க அனுமதிக்க மாட்டேன் என்றார்.

சட்டவிரோத ஊடுருவலுக்கு மத்திய அரசே காரணம் எனக் கூறிய அவர், பீஹாரில் நடந்த அரசியல் விளையாட்டை மேற்கு வங்கத்தில் ஆட பா.ஜ.க. முயல வேண்டாம் என்றும் எச்சரித்தார். இதற்கிடையே, SIR பணிகள் குறித்து தேர்தல் கமிஷனை சந்திக்க திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு டெல்லி செல்ல உள்ளது.

மம்தாவின் பேச்சு விரக்தியால் வெளியான மிரட்டல் என பா.ஜ.க. தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

___________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments