அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf | Facebook: @GladTidingsDeaf | Instagram: @gladtidingsdeaf
Key conspirator behind terrorist network revealed as doctor | GT ISL
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
டில்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
விசாரணையில், இந்த சதி ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சர் கஸ்வாதுல்ஹிந்த் பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடையது என கூறப்பட்டுள்ளது. கார் வெடிப்பு மற்றும் வெடி பொருட்கள் நிரப்பும் சதிக்கு தொடர்புடைய ஐந்து முக்கிய conspirators அனைவரும் டாக்டர்கள்: டாக்டர் ஆதில், டாக்டர் முஸாம்மில், டாக்டர் ஷாஹீன், டாக்டர் உமர், டாக்டர் அகமது மொஹியுதீன்.
ஜம்மு-காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் 2,900 கிலோ வெடி பொருட்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஹரியானாவில் மதபோதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், முக்கிய conspirator மற்றும் டாக்டர்கள் இணைந்து கார் வெடிப்பு திட்டத்தை தீட்டியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கைதான இமாம் இர்பான் அகமது செங்கோட்டையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை உருவாக்கிய முக்கிய சதிகாரன் என தெரியவந்தார்.
இர்பான் முன்பு ஸ்ரீநகரில் அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ ஊழியராக இருந்தார். அப்போது தன்னிடம் நெருக்கமாக பழகிய டாக்டர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத பாதைக்கு திருப்பி, பரிதாபாதை மையமாக கொண்டு நெட்வொர்க்கை உருவாக்கினார்.
இந்த நெட்வொர்க்கில் டாக்டர் முஸாம்மில், டாக்டர் உமர் மற்றும் டாக்டர் ஷாஹீன் உள்ளிட்டோர் அடங்குவர். டாக்டர் ஷாஹீன் பெண் பயங்கரவாத பிரிவான ஜமாத்-உல்-மொமினாத்தின் தலைவர் மற்றும் முக்கிய பைனான்சியராக செயல்பட்டார்.
இர்பான் அகமது, மருத்துவ மாணவர்கள் மனதில் பயங்கரவாத சிந்தனையை விதிப்பதை தனது முக்கிய பணியாகக் கொண்டிருந்தார் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுடனும் தொடர்பில் இருந்தார்.
Comments
Post a Comment