News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Create a Repository for Traditional Knowledge | GT ISL


 தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வளர்ச்சி அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்த வளர்ச்சிக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த மனிதநேய தத்துவம் வழிகாட்டும் என கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உலக பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதால், அவற்றை எதிர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, ஜி-20 அமைப்பின் கீழ் உலக பாரம்பரிய அறிவு களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்ற முக்கிய யோசனையையும் முன்வைத்தார். இது எதிர்கால தலைமுறைகளின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு உதவும் என குறிப்பிட்டார்.

ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தபோதும், தென் ஆப்ரிக்காவின் பிரகடனம் அமெரிக்கா இன்றி நிறைவேற்றப்பட்டது.

மேலும், பிரதமர் மோடி தென் ஆப்ரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை சந்தித்து, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் அரிய கனிமங்கள் இறக்குமதி குறித்து பேச்சு நடத்தினார். இந்தியா–தென் ஆப்ரிக்கா உறவை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் உறுதி தெரிவித்தன.

இந்தியா–பிரேசில்–தென் ஆப்ரிக்கா தலைவர்கள் மாநாட்டில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மனிதனை மையப்படுத்திய வளர்ச்சிக்காக முத்தரப்பு டிஜிட்டல் புதுமை கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதேபோல், இந்தியா–ஆஸ்திரேலியா–கனடா இடையே ACITI எனும் புதிய முத்தரப்பு தொழில்நுட்ப மற்றும் புதுமை கூட்டாண்மையும் அறிவிக்கப்பட்டது. இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், விநியோகச் சங்கிலிகள், சுத்தமான எரிசக்தி மற்றும் AI துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

___________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments