News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

No Probe on TVK Functionaries | GT ISL

  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் (41 பேர் பலி) தொடர்பில், த.வெ.க., நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் உட்பட சிலர் மீது வழக்குகள் பதியப்பட்டிருந்தது.

  • அக்கட்சியினர் பொதுக் குழு கூட்டங்களில் கலந்துகொண்டு, அரசை விமர்சித்து, குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ், கரூர் மாவட்ட தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜியை குற்றஞ்சாட்டினர்.

  • எதிர்பார்த்த போல, ஆதவ் அர்ஜுனா மற்றும் மற்ற த.வெ.க., நிர்வாகிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

  • காரணம்: பொதுக் குழுவில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று அறிவிக்கப்பட்டதால், அ.தி.மு.க.–த.வெ.க., கூட்டணி நிலையை பாதிக்காமல், அவர்களை நடவடிக்கையிலிருந்து தவிர்க்க வேண்டும் என அரசு உத்தரவு மற்றும் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது.

_______________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf


Comments