News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Parliament Winter Session Bars ‘Jai Hind’, ‘Vande Mataram’ Slogans | GT ISL


 பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராஜ்யசபா செயலகம் எம்.பி.க்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • சபைக்குள் எந்த பொருளையும் காட்சிப்படுத்தக் கூடாது.

  • விவாதத்தில் விமர்சனம் செய்த எம்.பி., பதிலுரை நேரத்தில் சபையில் இருக்க வேண்டும்.

  • சபை தலைவர் எடுத்த முடிவுகள் மற்றும் தீர்ப்புகளை சபைக்குள் அல்லது வெளியே விமர்சிக்கக் கூடாது.

  • சபையின் கண்ணியத்தை காக்கும் வகையில் எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டும்.

  • குறிப்பாக, சபைக்குள் ‘ஜெய்ஹிந்த்’, ‘வந்தே மாதரம்’, ‘நன்றி’ போன்ற கோஷங்களை எழுப்பக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவுக்குப் பிறகு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், இந்த அமர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

____________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments