News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Parliament Winter Session Set for Heated Showdown | GT ISL

 

டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெற உள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி தானாகவே பறிபோகும் அரசியல் சாசன திருத்த மசோதா மற்றும் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதாவை முன்னெடுக்க அரசு முயற்சி செய்கிறது.

மேலும், காப்பீட்டு துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதா உட்பட, அணு எரிசக்தி, உயர்கல்வி, நெடுஞ்சாலை, கார்ப்பரேட் சட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் மொத்தம் 10 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மற்றும் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளன. இதனால், முக்கிய மசோதாக்கள் மற்றும் அரசியல் சர்ச்சைகள் காரணமாக குளிர்கால கூட்டத் தொடரில் கடும் மோதலும் பரபரப்பும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

___________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments