News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Plot to Carry Out Nationwide Chemical Attacks Uncovered | GT ISL


  • நாடு முழுவதும் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.

  • காந்திநகர் மாவட்டம் அதலஜ் சுங்கச்சாவடி அருகே சந்தேக வாகனத்தை சோதனையிட்ட போது, 3 துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள் மற்றும் 4 லிட்டர் ‘ரிசின்’ ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது.

  • கைது செய்யப்பட்டவர்கள்: டாக்டர் அகமது முகைதீன் சையது (ஹைதராபாத்) மற்றும் முகமது சுஹைல், ஆசாத் சுலைமான் சைபி (உத்தரப் பிரதேசம்).

  • இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கான ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பின், பயங்கரவாத அமைப்புகள் புதிய முறையிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக உளவு தகவல்.

  • ஜம்மு–காஷ்மீரில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றன; பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  • ரிசின் என்பது ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும், மிகக் கொடிய விஷம்; சுவாசித்தாலோ, உட்கொண்டாலோ உடனடி உயிரிழப்பு ஏற்படலாம்.

_______________________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

#deaf #deafnews #deafnewsdaily #deafnewsnetwork #islindia #deafcommunity #deafworld #deafhood #deafpride

#deaftalent #deafeducation #deafsignlanguage

Comments