News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Russia to Transfer Fighter Jet Tech to India | GT ISL


 ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த எஸ்.சி.ஓ. (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை கண்டு காணாமல் இருப்பதும், கண்துடைப்பு நாடகம் ஆடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உலக நாடுகளை கடுமையாக எச்சரித்தார். பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இந்தியாவில் ‘சுகோய்–57’ ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்க தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் முழுமையாக வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்தது. முதலில் விமானங்கள் ரஷ்யாவில் தயாரித்து வழங்கப்படும்; பின்னர் இந்தியாவில் உற்பத்தி தொடங்கி, 100% தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் உதிரிபாகங்களும் இங்கேயே தயாரிக்கப்படும்.

இந்த முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம், அடுத்த மாதம் அதிபர் புடின் இந்தியா வரும்போது இறுதி செய்யப்படலாம் என்றும், இது இந்திய விமானப்படையின் திறனை பெரிதும் உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

__________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments