News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Trump Designates Saudi Arabia as Major Non-NATO Ally | GT ISL


 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சவுதி அரேபியாவுக்கு 48 ‘எஃப்-35’ ரக போர் விமானங்களை விற்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்குமான ராணுவ, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்படும். அதே சமயம், டிரம்ப் சவுதியை “நேட்டோ அல்லாத முக்கிய கூட்டணி நாடு” என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அமெரிக்க ஆயுத தொழில்நுட்பங்கள், பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்குவார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் 88 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், விமான விற்பனையுடன் இணைந்து இடம்பெற்றுள்ளது.

____________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments